சீரியலில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருப்பவர் நடிகை பிரவீனா. சீரியல்கள் மட்டுமில்லாமல் திரைப்படங்களிலும் முன்னணி நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இளம் வயதிலிருந்து, இன்னும் சொல்லப்போனால் குழந்தை பருவத்தில் இருந்து சினிமாவில் நடித்து வரும் நடிகை பிரவீனா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவளே என்ற சீரியல் மூலம் தான் என்று கூறலாம்.
இந்த சீரியலில் நான்கு மகன்களுக்கு அம்மாவாக நடித்திருந்தார். இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுக் கொடுத்தது.

அதனை தொடர்ந்து ராஜா ராணி என்ற சீரியலில் இரண்டாம் பாகத்தில் மாமியார் கதாபாத்திரத்திலும் அம்மா கதாபாத்திரத்திலும் புடவை சகிதமாக தோன்றிய ரசிகர்களை கவர்ந்தார்.
புடவை சகிதமாக குடும்ப குத்துவிளக்காக தோன்றினாலும் கூட இணைய பக்கங்களில் மாடர்ன் உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அவ்வபோது, சுற்றுலா செல்வதை வாடிக்காக வைத்திருக்கும் பிரவீனா அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்வது வழக்கம்.

மட்டும் இல்லாமல் தன்னுடைய தோட்டத்தில் பூத்த மலர்கள் காய்கறிகள் ஆகியவற்றைப் பறித்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்.
இந்நிலையில், மாடர்ன் உடையில் இளம் நடிகைகளை மிஞ்சும் அழகில் காட்சியளிக்கும் அவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.