ஹாலிவுட்… பாலிவுட்டுக்கு கோலிவுட்… அப்போ இதுக்கு அட்லீ

தமிழ் சினிமாவில் எத்தனை விமர்சனங்களை எதிர்கொண்டாலும் எந்த படத்தினையும் ப்ளாப் ஆக்காமல் உச்சபட்ச சக்ஸஸ் ரேட் வைத்து இருப்பவர் அட்லீ. ஜவான் படத்துக்கு பின்னர் அட்லீயின் புது படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் அட்லீ. என்னத்தான் படம் சூப்பர்ஹிட் ஆனாலும் விமர்சன ரீதியாக படம் மௌனராகம் படத்தின் காப்பி என கலாய்த்தனர். தொடர்ந்து வெளியான தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களுமே வெற்றி பெற்றது.

ஆனால் படம் விமர்சன ரீதியாக நிறைய கலாய் வாங்கியது. பெரும்பாலும் தமிழ் மற்றும் ஹாலிவுட் படங்களில் இருந்து காட்சியை அப்பட்டமாக சுட்டு விட்டார் அட்லீ என ஓட்டினர். ஆனால் நேர்மாறாக படத்தின் வசூல் எக்கசமாக வந்தது. எல்லா படங்களுமே சூப்பர்ஹிட் லிஸ்ட் தான்.

இதையடுத்து பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து படமெடுக்க போனார். சில வருடங்கள் நடந்த ஜவான் படம் சமீபத்தில் ரிலீஸானது. படம் அப்பட்டமான பல தமிழ் படங்களின் காப்பி எனக் கூறப்பட்டது. இருந்தும் படத்தின் வசூல் 1000 கோடியை தாண்டிவிட்டது. இதனால் அட்லீ மினிமம் கியாரண்டி இயக்குனர் ஆனார்.

இதனை தொடர்ந்து அவரின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். விஜய் மற்றும் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தினை அட்லீ இயக்க போகிறார் என்றும் அதற்கான கதை தயாரிப்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் ஹாலிவுட்டை சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் ஜவான் படத்தினை பார்த்து ரொம்பவே இம்ப்ரஸ் ஆகிவிட்டார்களாம். அதனால் அட்லீயை வைத்து அடுத்த படத்தினை உருவாக்கும் முயற்சியில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply