நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்தினம் நடிகை திரிஷா, துல்கர் சல்மான் கூட்டணியில் உருவாக உள்ள தக் லைஃப் ( Thug Life ) திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு நேற்று ஒரு வீடியோ காட்சியுடன் வெளியானது.
நடிகர் கமல் ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தாக இந்த டீசர் வெளியாகியிருந்தது.
ரசிகர்களை மிகவும் கவர்ந்த இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தின் காட்சிகளை கொண்டு இது ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் ஜெ ஜெ ஆபிரகாம் இயக்கத்தில் வெளியான ஸ்டார் வார்ஸ் இந்த ரைஸ் ஆப் ஸ்கை வாக்கர் திரைப்படம் திரைப்படத்திலும் இதே போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.

எனவே, அந்த படத்தின் காப்பியாக இந்த திரைப்படம் இருக்கலாம் என இரு படத்தின் காட்சிகளையும் ஒப்பிட்டு இணையத்தில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதனை பார்த்த ட்விட்டர் வாசி ஒருவர். நான் கூட நாயகன் ப்ரீக்குவல் என்றுதான் நினைத்தேன். சந்தோஷப்பட்டேன்.
ஆனால் ஆண்டவர் வழக்கம் போல ஹாலிவுட் DVD-யை தூக்கிட்டு வந்துட்டாரு. என்று கலாய் கருத்து ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
எந்த DVD-யா இருந்தா என்ன..? பாக்குறதுக்கு நல்லா இருக்குல்ல.. அது போதும்.. என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.