“அந்த” மாதிரியான படம் என்று எனக்கு தெரிந்தது – அபர்ணா தாஸ்

பீஸ்ட், டாடா திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அபர்ணா தாஸ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.

அதில் அவரிடம், ஏதாவது படத்திற்கு சென்று.. ஏண்டா இந்த படத்துக்கு வந்து மாட்டிக்கிட்டோம்.. என்று இடைவேளையின் போது வெளியேறிய சம்பவம் இருக்கிறதா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அபர்ணா தாஸ். ஆம் இருக்கிறது என்று பதில் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், படம் பிடிக்காமல் வெளியே வரவில்லை.

ஆனால் அந்த படத்திற்கு என்னுடைய பள்ளி நண்பர் என்னை அழைத்து சென்றிருந்தார். அங்கு சென்ற பிறகுதான் அந்த படம் “அந்த” மாதிரியான படம் என்று எனக்கு தெரிந்தது.

எந்த மாதிரி படம் என்றால் ஒரு ஆணும் பெண்ணும் அமர்ந்து சேர்ந்து பார்க்க கூடாத ஒரு தப்பான திரைப்படம்.

அப்படியான படத்திற்கு என்னுடைய நண்பன் அழைத்துச் சென்றிருந்தார். எனக்கு என்ன செய்து கொண்டு தெரியவில்லை.

எனவே இடைவேளையின் போது திரையரங்கில் இருந்து வெளியே வந்து விட்டேன் என கூறியிருக்கிறார். இவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply