நயன்தாரா என்னோட ஃப்ரெண்டே கிடையாது – திரிஷா

நடிகை திரிஷா சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தார்.

அவரிடம், நடிகை நயன்தாராவும் உங்களுக்கும் போட்டி இருக்கிறது நயன்தாராவும் உங்களுக்கும் சண்டை.. உங்களுக்கு நயன்தாராவை பிடிக்காது.. நயன்தாராவுக்கு உங்களை பிடிக்காது.. என்றெல்லாம் தகவல்கள் பரவுகிறது. இது பற்றி உங்களுடைய கருத்து என்ன..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த நடிகை திரிஷா. பாருங்கள், நானும் நயன்தாராவும் சந்தித்துக் கொள்வதே என்பது மிகவும் அரிதான ஒரு விஷயம்.

ஏதேனும், விருது விழாக்கள் அல்லது நாங்கள் இருவரும் நடிக்கும் திரைப்படங்களின் படப்பிடிப்பு ஒரே ஸ்டூடியோவில் நடந்தால் அல்லது நடிகர்களாக சேர்ந்து ஏதேனும் விருந்து ஏற்பாடு செய்திருந்தால் இப்படி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டால் தான் உண்டு.

தவிர இருவரும் நண்பர்கள் கூட கிடையாது. எங்களுக்குள் இருக்கும் அதிகபட்ச தொடர்பு இவ்வளவுதான். இருவரும் சந்தித்துக் கொண்டாலும் நாங்கள் இருவரும் பேசுவது மிகவும் சாதாரணமாக இருக்கும்.

உங்களுடைய படங்கள் எப்படி போய்க்கொண்டிருக்கிறது. அடுத்த யார் படத்தில் நடிக்கிறீர்கள்..? இப்படி சினிமா சார்ந்த ஒரு கேள்வி கூட இருவரும் மாறி மாறி கேட்டுக் கொள்ள மாட்டோம்.

நீங்கள் ஒரு நண்பரை அல்லது தோழியை சந்தித்தால் என்ன கேட்பீர்கள்? அவ்வளவுதான் எங்கள் இருவருக்கும் இருக்கக்கூடிய உரையாடல். எப்படி இருக்கீங்க ..? என்ன பண்றீங்க..? அதை தாண்டி அவருடைய குடும்பத்தில் அனைவரும் நலமாக இருக்கிறார்களா..? இது போன்ற சாதாரணமான கேள்விகளை மட்டும் தான் நானும் நயன்தாராவும் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.

அதைத் தாண்டி வேற எதையும் பேசியது கூட கிடையாது. நயன்தாரா எனக்கு தோழியே கிடையாது என்னும் போது எனக்கும் அவருக்கும் சண்டை எங்கிருந்து வரும் எப்படி இருவரும் ஒருவருக்கொருவர் பேசாமல் இருப்போம் என கூறியுள்ளார் நடிகை நயன்தாரா.

Leave a Reply