பிரபல நடிகர் குறித்த உண்மையை உடைத்த நடிகை சுகன்யா..!

கடந்த 1991 ஆம் வருடம் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் கிருஷ்ணவேணி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை சுகன்யா.

பரதநாட்டிய கலைஞராகவும், நடிகையாகவும் அறியப்படும் சுகன்யா கடந்த 1992 ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான சின்ன கவுண்டர் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சுகன்யா சின்ன கவுண்டர் திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்த பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த படத்தில் நடிக்க அழைக்கும்போது இந்த படத்தின் கதாநாயகி நான் தான் என்று இயக்குனர் என்னிடம் கூறவே இல்லை. படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்த பிறகு தான் எனக்கு நான் தான் இந்த படத்தின் ஹீரோயின் என தெரியவந்தது.

அந்த நேரத்தில் விஜயகாந்த் சாரிடம் பேசுவதற்கு நான் மிகவும் பயப்பட்டேன். படப்பிடிப்பு தொடங்கி ஒரு இரண்டு மூன்று நாட்கள் இருக்கும் Chair எடுப்பதற்காக அவர் அருகே சென்றேன்.

அவரை பார்த்ததும் பயந்து போய் அப்படியே நின்றேன். என்னை பார்த்ததும், ஹாய் என்று கூறினார். நானும் ஹாய் சார் என்றேன். என்னமா என்ன வேணும் என கேட்டார். Chair வேணும் சார் என கேட்டேன்.

Chair தானே எடுத்துட்டு போங்க.. என்று சொன்னார். உடனே அங்கிருந்து Chair-ஐ எடுத்துக்கொண்டு ஓடி வந்து விட்டேன்.

இப்படித்தான் படப்பிடிப்பு தொடங்கிய பின்பும் சில நாட்கள் விஜயகாந்த் சாரிடம் பேசுவதற்கு எனக்கு பயமாகவே இருந்தது.

அதன் பிறகு நாட்கள் செல்ல செல்ல அவருடன் எளிமையாக பழகி விட்டேன். குறிப்பாக தொப்புளில் பம்பரம் விடும் காட்சியை நான் கேட்ட பொழுது எனக்கே ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.

ஆனால், அதனை எந்த ஒரு ஆபாசமும் இல்லாமல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படியாக அருமையாக இயக்கியிருந்தார் இயக்குனர் ஆர்பி உதயகுமார்.

இப்பொழுதும் அந்த காட்சியை பலரும் ரசிக்கிறார்கள். அந்த காட்சி படமாக்கப்படும் பொழுது எனக்கு எந்தவிதமான ஒரு பயமும் கிடையாது. குறிப்பாக விஜயகாந்த் சாரின் படப்பிடிப்பு தளத்தில் பெண்களுக்கு எப்படியான ஒரு பாதுகாப்பு இருக்கும் என்பதை தெரிந்து கொண்டேன் என பேசி இருக்கிறார் நடிகை சுகன்யா.

Leave a Reply