அவங்களத்தான் லவ் பண்றேன் – வெளியே வந்ததும் ஷாக் கொடுத்த பிரதீப்

பிக்பாஸில் ஒரு டஃப் போட்டியாளராக இருந்தவர் பிரதீப் ஆண்டனி. திட்டம் போட்டு அவரை வெளியே அனுப்பி விட்டதாகவே இன்று வரை இணையத்தில் பேசிக் கொண்டு வருகிறார்கள். கொஞ்சம் ரஃப்வான கேரக்டர், எதையும் உடனே ஒப்புக் கொள்ளாத மன நிலையில் இருக்கும் கேரக்டர்தான் பிரதீப்.

ஆரம்பத்தில் செமயான வெளிப்பாடை பிரதீப்பிடம் பார்க்க முடிந்தது. ஆனால் எப்போது சின்ன பிக்பாஸ் வீட்டிற்குள் பிரதீப்புடன் மாயா, ஐஸு போனார்களோ அதிலிருந்து மாயாவின் சதி வலையில் வீழ்ந்தார் பிரதீப் என்றுதான் சொல்ல வேண்டும். அதுவரை தனியாகத்தான் விளையாடிக் கொண்டிருந்தார்.

அந்த முதல் இடம் டாஸ்க்கிலேயே மாயாவுக்காக விட்டுக் கொடுத்த மாதிரி மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அப்பவே காசும் முக்கியம் , அந்த டைட்டிலும் முக்கியம் என்று சொல்லியிருந்தால் இன்று அவர் இடமே வேறு. இந்த வீட்டிற்குள் வந்ததுமே அனைவரையும் வச்சு செய்யப் போறேனு சொன்ன பிரதீப் மாயா எனக்கு தங்கையாக இருக்கிறார் என்று சொல்லும் போதே அவர் எண்ணத்தில் இருந்து சறுக்கி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் விளையாட்டின் ஒரு வகை வியூகம் என்று நினைத்துக் கொண்டு எல்லாரிடமும் லவ் கண்டண்ட் கொடுத்ததும் பிரதீப் மீது கொஞ்சம் அதிருப்தி ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இவர் இங்கு இருந்தால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பெண் போட்டியாளர்கள் அனைவரும் சொல்ல ரெட் கார்டு கொடுத்து பிரதீப் வெளியனுப்பப் பட்டார்.

ஆனாலும் அந்த கார்டை வைத்து தன் குடும்பத்துடன் சேர்ந்து ஜாலியாக நின்று போஸ் கொடுத்த புகைப்படமும் வைரலானது. இந்த நிலையில் ஒரு பெண்ணை காதலிப்பதாக பிரதீப் சொல்லியிருக்கிறார். ஏற்கனவே 7 வருடமாக ஒரு பெண்ணை காதலித்தாராம். அது பிரேக் அப் ஆகிவிட்டதாம்.

அதன் பின் இன்னொரு பெண்ணை 4 வருடமாக காதலித்தாராம். அதுவும் பிரேக் அப். இப்போது வேறொரு பெண்ணை காதலிப்பதாகவும் அந்தப் பெண் மிகவும் பொறுமைசாலி. இது எங்க வரை போய்கிறது என பார்ப்போம் என்று சொல்லியிருக்கிறார்.

Leave a Reply