தலைவர் 169: ரஜினிகாந்த் மகளாக நடிக்கிறாரா இந்த பிரபல நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’தலைவர் 169’ திரைப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் ரஜினியின் மகளாக நடிக்க இருப்பதாக வதந்தி ஒன்று மிக வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படமான ’தலைவர் 169’ திரைப்படம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை நெல்சன் இயக்க உள்ளார் என்பதும் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது மட்டுமே அதிகாரபூர்வ அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதுவதோடு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் ஒரு செய்தி வைரலானது. தற்போது கடந்த சில மணி நேரங்களாக ரஜினியின் மகளாக பிரபல நடிகை பிரியங்கா அருள்மோகன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பிரியங்கா, சமீபத்தில் வெளியான சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்திலும் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

’தலைவர் 169’ படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள்மோகன் நடிப்பது உண்மை என்றால் மூன்றாவது முறையாக இருவரும் சேர்ந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share