14 வயது மாணவனை கழுத்தில் அழுத்தி பின்னர் டீசர் துப்பாக்கியால் சுட்ட பிரிட்டன் பொலிசார் !

 

பேர்மிங்ஹாம் நகரில் நேற்றைய தினம்(17) பொலிசாருக்கு ஒரு அவசர அழைப்பு வந்துள்ளது. உடனே விரைந்து சென்ற அவர்கள் ஒரு வீட்டின் பின் பகுதியில் வைத்து வெறும் 14 வயதே நிரம்பிய சிறுவனை, கழுத்தில் அழுத்தி லாக் செய்ய முனைந்ததோடு. அவன் மீது டீசர் துப்பாக்கியால் சுட்டு, செயல் இழக்கச் செய்து நிலத்தில் விழுத்தி உள்ளார்கள். அங்கே நின்ற பொதுமக்கள், அவன் சிறுவன் , அவன் கழுத்தை அழுத்தவேண்டாம் என்று கத்தி கூச்சல் போட்டும் பொலிசார் கேட்டபாடாக இல்லை.

என்ன குற்றத்திற்காக அவன் மீது 10,000 வால்ட் மின்சாரத்தை பாச்சி அவனை தடுமாறவைத்து நிலத்தில் விழுத்தி இறுதியில் கைது செய்தார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ வைரல் ஆகியுள்ள நிலையில். பொலிஸ் கமிஷனர். இது தொடர்பாக சிறப்பு விசாரணை ஒன்று நடைபெறும் என்று கூறியுள்ளார். பிரித்தானியப் பொலிசார் அமெரிக்க பொலிசாரைப் பின்பற்றுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அது போக பாதிக்கப்பட்ட மாணவன் ஆசிய இனத்தை சேர்ந்தவன் என்றும் கூறப்படுகிறது. இது இனவெறிச் செயலாக கூட இருக்கலாம். கீழே வீடியோ இணைப்பு.

Leave a Reply