எலிமினேஷன் ஆகிடுவோமோ என ஜோக்கர் ஆக மாறிய பிரதீப்.. இடையில் பூந்து கிடா வெட்டிய விஷ்ணு

முதலில் இந்த சீசன் துவங்கப்படும் போது பிரதீப் ஆண்டனியை தான் செம ஸ்ட்ராங்கான கண்டஸ்டண்ட் என அனைவரும் நினைத்தனர். ஆனால் ஒரே வாரத்தில் அவரை ஜோக்கர் என்று முத்திரை குத்து விட்டனர். அந்த அளவிற்கு அவர் நடந்து கொள்கிறார்.

அதிலும் நேற்றைய நிகழ்ச்சியில் பிரதீப் இந்த வாரம் எலிமினேட் ஆயிடுவோமோ என்ற பதட்டத்தில் போட்டியாளர்களின் முன்பு தேம்பி தேம்பி அழுகிறார். இவரையா இந்த சீசனில் டஃப் கண்டஸ்டண்ட் என நெனச்சோம்னு தோணுச்சு.

அந்த சமயத்தில் பிரதீப்பை சமாதானப்படுத்த வேண்டும் என்று விஷ்ணு ஒரு சில ஆதரவான வார்த்தைகளை பேசினார். சைடு கேப்பில் கிடா வெட்ட பார்க்கிறாயா என்று மனதில் நினைத்த பிரதீப் விஷ்ணுவை, ‘ உன்னுடைய அட்வைஸ் இப்போது எனக்கு தேவையில்லை. என்னோட மனநலமையை புரிஞ்சுக்க, கொஞ்சம் அமைதியா இரு’ என்று நோஸ்கட் கொடுத்தார்.

‘இதுதான் உங்களோட பிரச்சனை சீக்கிரமே ஒருத்தரை தூக்கி எறிந்து பேசுறீங்க. உடனே வந்து சாரி என்றும் சொல்கிறீர்கள்’ என்று விஷ்ணு பிரதீப்பின் மீது கோபப்பட்டார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த யுகேந்திரன் பிரதீப்பிடம் தனியாக பேசி அவருடைய கேம் ஸ்டைலை மாற்றும்படி சொன்னார்.

நீ இந்த வாரம் வெளியேறி போனா அதை எதார்த்தமா எடுத்துக்கொள். ஒரு வேளை அடுத்த வாரம் நீ பிக் பாஸ் வீட்டில் இருந்தால் கேமை மாற்றி விளையாண்டு பாரு என்று ஓபனாகவே யுகேந்திரன் பிரதீப்புக்கு ஐடியா கொடுத்தார். பிரதீப்பும் அதை ஏற்றுக் கொண்டார்.

இவ்வளவு அழகாக பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களை ஹேண்டில் செய்யும் யுகேந்திரன் வயதுக்கு ஏற்ற பக்குவத்துடன் நடந்து கொள்கிறார். இதனாலே இவரை ரசிகர்களுக்கு பிடிச்சிருச்சு. ஆனா என்ன கெட்ட நேரமோ நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் இவருக்கு மிகக் குறைந்த ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்து, இந்த வாரம் வெளியேறுகிறார். இந்த விஷயத்தை பிக் பாஸ் ரசிகர்களால் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

Leave a Reply