சிங்களவருக்கு துணையாக இருந்த மோடி தற்போது அதே முறையை கையாண்டார் !

 

இலங்கையில் 2009ம் ஆண்டு, யுத்தம் நடந்தவேளை, பெரும் பின்னடைவை சந்தித்த விடுதலைப் புலிகள், காங்கிரஸ் அரசு மாறி மே 16ம் திகதி மோடி அரசு ஆட்சியை ஏற்றால் இலங்கை தமிழர்களுக்கு பெரும் உதவிகளைச் செய்வார் என்று நம்பியது. ஆனால் அது எதுவுமே நடக்கவில்லை. மாறாக சிங்கள அரசுக்கு ஆதரவு கொடுத்து விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க மோடி துணை புரிந்தார். இந்த நிலையில் புலம்பெயர் வாழ் சில தமிழர்கள். ஈழத்தில் இந்துக் கோவில்களை சிங்களவர்கள் இடிக்கிறார்கள் என்று சொல்லி,மோடியின் ஆதரவைப் பெற்றுவிடலாம் என்று புதுக் கதை ஒன்றை சொல்லி பல தமிழர்களை திசை திருப்பி இருந்தார்கள். ஆனால் அன்று முதல் இன்றுவரை மோடி மாறவே இல்லை.. !

இதற்கு நல்ல உதாரணம், ஸ்ரேல் மீது தற்போது ஹமாஸ் விடுதலை அமைப்பு தாக்குதல் நடத்தும் நிலையில். மோடி இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது தான். மத்திய கிழக்கில் உள்ள பாலஸ்தீனத்தில் இருந்து கடந்த 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக உருவானது. அப்போது முதல் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கிறது. காசா தன்னாட்சி பெற்ற பகுதியாக உள்ளது. இது ஊர் அறிந்த விடையம்.

இங்கு ஹமாஸ் ஆதிக்கம் உள்ளது. இந்த ஹமாஸ் இயக்கம் இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக ஆயுத மோதல் நீடித்து வருகிறது. இதனால், இரு தரப்பிலும் உயிர்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் நேற்று அந்நாட்டு நேரப்படி காலை 6.30 மணிக்கு இஸ்ரேல் நாட்டை நோக்கி பாலஸ்தீன் ஹமாஸ் மிக மோசமான தாக்குதலை ஆரம்பித்தது. தற்போது, இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவாக மோடி பேசியுள்ளார். மேலும் ஆயுத உதவிகளை செய்யவும் அவர் தயாராக உள்ளாரம். அட தமிழ் மடையர்களே … இந்த மோடியையா ? நீங்கள் இன்னும் நம்பிக் கொண்டு இருக்கிறீர்கள் ?

Leave a Reply